செல்பி எடுத்துக் கொண்டிருந்த பெண்களிடம் செல்போன் அபேஸ்!

Share this News:

சண்டீகர் (05 பிப் 2020): பஞ்சாப்பில் சாலையின் ஓரமாக நின்று செல்பி எடுத்துக்கொண்டிருந்த பெண்களிடம் செல்போனை திருடர்கள் பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் இரண்டு பெண்கள் சாலை ஓரமாக நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் அவர்களின் செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், சாலையில் நின்றவாறு திருடன், திருடன் என்று கத்தியுள்ளனர். அப்போது அதே சாலையில் சென்ற பொதுமக்கள் அவர்களை பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆயினும் அவர்கள் பைக்கில் வேகமாக தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் அந்த இளைஞர்களின் படங்களை தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.


Share this News:

Leave a Reply