புதுடெல்லி (02 மார்ச் 2021): பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ள நிலையில், அவர் எந்த கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டார் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் அவர் கோவேக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்ட தயாரிக்கப்பட்ட ஒரு தடுப்பூசியாகும். சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்திலுள்ள ஒரு மருந்து ஆய்வகத்தைப் பிரதமர் மோடி விசிட் செய்த பாரத் பயோடெக் நிறுவனம்தான் முழுக்க முழுக்க இந்த கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
மேலும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே இந்திய ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியையே பிரதமர் மோடி எடுத்துக்கொண்டுள்ளார்.
அதேவேளை மற்ற நாட்டு தலைவர்கள் போல் ஆரம்பத்திலேயே கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி எடுத்துக் கொல்லவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது.