புதுடெல்லி (25 அக் 2020): பிரதமர் மோடி மண் கி பாத் உரையின்போது, பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ காலை 11 மணிக்கு ஒலிபரப்பானது. மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறுகையில், “விஜயதசமி திருநாளில் அனைவருக்கும் எனது மன மார்ந்த வாழ்த்துக்கள். பண்டிகைகளை கொண்டாடும் போது வெகு கவனத்தோடு செயல்பட வேண்டும். கொரோனா காலத்திலும் காதி துணிகளின் விற்பனை அதிகரித்துள்ளது. சந்தைகளில் பொருட்களை வாங்கும் போது உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
எல்லையில் நம்மை பாதுகாக்கும் வீரர்களை நாம் நினைவுகூர வேண்டும். பண்டிகை காலத்தில் வீட்டில் விளக்குகளை அவர்களுக்காக ஏற்ற வேண்டும். அக்.31 ஆம் தேதி நமது முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவருக்கு நாம் மரியாதை செலுத்துவோம்” என்றார்.