நீக்கப்பட்ட மோடியின் யூட்டூப் சேனல் டிஸ்லைக் பட்டன்!

Share this News:

புதுடெல்லி (21 அக் 2020): சமீபத்தில் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் யூடூப் டிஸ்லைக் பட்டன் நீக்கப்பட்டுள்ளது.

நேற்று பிரதமர் ஆற்றிய உரையில் “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய மக்கள் நெடுந்தூரம் பயணித்துள்ளனர். பொதுமுடக்கம்தான் போயிருக்கிறதே தவிர வைரஸ் இன்னும் போகவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது. கடந்த 7-8 மாதங்களாக இந்தியர்களின் முயற்சியால் இந்தியா தற்போது நிலையாக இருக்கிறது.

பொருளாதார நடவடிக்கைகளும் படிப்படியாக வேகமாக வளர்ந்து வருகின்றன. நமது பொறுப்புகளுக்காக இப்போது நம்மில் பலரும் வீட்டை விட்டு வெளியே வருகிறோம். பண்டிகைக்காலமும் சந்தைக்கு மெல்ல திரும்பி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பாவில் கொரோனா பாதிப்பு குறைந்தபிறகு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

வெளிநாடுகளை விட இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டு குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. தடுப்பூசி கிடைக்கும் வரை கொரோனாவுக்கு எதிரான போராட்டம் ஓயக்கூடாது. ஒவ்வொரு இந்தியருக்கும் தடுப்பூசியை கொண்டுசேர்ப்பதே அரசின் இலக்கு.

நீங்கள் மாஸ்க் போடாமல் வெளியே வந்தால் உங்களை மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தினரையும், குழந்தைகளையும், முதியோரையும் பெரிய ஆபத்தில் தள்ளுகிறீர்கள். போர்க்கால அடிப்படையில் இப்போது நாம் மேற்கொள்ளும் முயற்சிகலை பல ஆண்டுகளுக்கு பின்னர் மனித இனத்தை பாதுகாக்க மேற்கொண்டதாக பார்ப்போம்.” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மோடியின் உரைக்கு அதிகமான டிஸ்லைக் வந்ததை அடுத்து அந்த பட்டன் நீக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மோடி ஆற்றிய உரைக்கு பல டிஸ்லைக்குகள் வந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply