கோவாவில் காலியாகும் பாஜக கூடாரம்!

Share this News:

பானஜி (22 ஜன 2022): கோவாவில் முன்னாள் முதல்வர் மனோகர் பரிக்கரின் மகன் உத்பல் பரிக்கர் பாஜகவை விட்டு விலக்கியுள்ள நிலையில் மேலும் 5 தலைவர்கள் பாஜகவிலிருந்து விலகியுள்ளனர்.

பாஜகவின் வேட்பாளர் அறிவிப்புக்கு பின், சீட் கிடைக்காத தலைவர்கள் ஒவ்வொருவராக கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். ஒரே இரவில், கோவாவில் ஐந்து முக்கிய பாஜக தலைவர்கள் பாஜகவுக்கு எதிராக மாறியுள்ளனர்.

முன்னாள் முதல்வர் லக்ஷ்மிகாந்த் பர்சேகர், முன்னாள் அமைச்சர் தீபக் போஸ்கர், துணை சபாநாயகர் இசிடோர் பெர்னாண்டஸ், மகளிர் அணி தலைவர் சாவித்ரி கவேல்கர், முன்னாள் முதல்வர் மனோகர் பரிக்கரின் மகன் உத்பால் பரிக்கர் ஆகியோர் பாஜகவை விட்டு விலகி சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சியும், சிவசேனாவும் உத்பலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மனோகர் பரிக்கருக்கு பாஜக துரோகம் செய்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சியும் பிரச்சாரம் செய்து வருகிறது. 2017ல் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் நூலிழையில் பாஜக ஆட்சி அமைத்தது. இந்த முறை தனித்து ஆட்சியமைக்க திட்டமிட்டுள்ள நிலையில், தலைவர்களின் ராஜினாமா பாஜகவின் காரியத்தை எளிதாக்காது என்பது தெளிவாகிறது.


Share this News:

Leave a Reply