திருவனந்தபுரம் (01 செப் 2021): இந்திய அளவில் கேரளாவில் மட்டுமே அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அளவில் கொரோனா பாதிப்பு இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கேரள மாநிலத்தில் மட்டும் 32,803 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
ஆனால் இந்திய அளவில் 41965 பேர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 460 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,509 ஆக குறைந்துள்ளது. 20 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,719 பேர் குணமடைந்து உள்ளனர்.
இதற்கிடையே கேரளாவில் அதிக பாதிப்பு ஏற்படுவதால் அங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.