குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்காக மருத்துவமனைகளாக மாறிய மசூதிகள்!

Share this News:

வதோதரா (21 ஏப் 2021); இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக ஆளும் குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மசூதிகள் மருத்துவமனைகளாக மாறியுள்ளன.

பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவலால் குஜராத்தில் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், குஜராத் மாநில மசூதிகள் மருத்துவமமனைகளாக செயல்பட்டு வருகின்றன.

குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டம் ஜகாங்கீர்புரா பகுதியில் உள்ள மசூதியில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெரும் வகையில் படுக்கைகள் அமைத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து மசூதி பொறுப்பாளர் கூறுகையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் படுக்கை வசதி தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மசூதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற முடிவு செய்துள்ளோம். ரமலான் மாதத்தில் இதை விட சிறப்பாக செய்வதற்கு வேறு என்ன உள்ளது’ என்றார்.

குஜராத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 11 ஆயிரத்து 403 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 117 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 15 ஆயிரத்து 972 ஆக அதிகரித்துள்ளது.


Share this News:

Leave a Reply