கர்நாடகாவில் பஜ்ரங்தளை சேர்ந்தவர் கொலை – முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பிய வன்முறை!

Share this News:

ஷிமோகா (21 பிப் 2022): கர்நாடகாவில் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த 26 வயதான ஹர்ஷா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்தது. கலவரத்தில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்களை நோக்கி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

கர்நாடகாவில் பஜ்ரங் தள் பிரமுகரான ஹர்ஷாவைக் கொன்றது யார் என்பதில் தெளிவு இல்லாத நிலையில், பஜ்ரங் தள் அமைப்பினரும் மாநிலத்தில் உள்ள பாஜக தலைவர்களும் இந்தக் கொலைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

ஷிமோகா பகுதியில் பல வாகனங்கள் தீவைக்கப்பட்டன. நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்க காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளது.

இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில், ஷிமோகாவின் ஆசாத் நகர் பகுதியில் உள்ள முஸ்லிம் வீடுகள் மீது பஜ்ரங் தள உறுப்பினர்கள் கற்களை வீசி தாக்குவதைக் காணமுடிகிறது.

பஜ்ரங் தள் உறுப்பினரான ஹர்ஷா தையல்காரராகப் பணியாற்றி வந்தார். இவர் அடையாளம் தெரியாத நபர்களால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

இதற்கிடையே இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹிஜாப் விவகாரத்திற்கும், இந்தக் கொலைக்கும் தொடர்பில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply