முஸ்லிம் தம்பதிகள் தத்தெடுத்து வளர்த்த இந்து பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம்!

Share this News:

காசர்கோடு (18 பிப் 2020): கேரளாவில் முஸ்லிம் தம்பதிகள் தத்தெடுத்து வளர்த்த பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்தனர்.

கேரளாவின் காசர்கோடு பகுதியில் வசித்து வந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணின் பெற்றோர் சிறு வயதிலேயே மரணம் அடைந்து விட்டனர். அனாதையாக இருந்த ராஜேஸ்வரியை, அப்துல்லா, கதீஜா தம்பதிகள் வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் ராஜேஸ்வரிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அப்துல்லா, கதீஜா தம்பதிகள் விஷ்ணு பிரசாத் என்பவருக்கு கேரளாவின் காசர்கோடு பகவதி கோவிலில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

அப்துல்லா கதீஜா தம்பதியினருக்கு ஷமீம், நஜீப் மற்றும் ஷரீப் ஆகிய மூன்று மகன்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது மற்றும் ஒரு மனித நேயத்துக்கு எடுத்துக் காட்டாக அமைந்தது.


Share this News:

Leave a Reply