இஃப்தார் நோன்பு துறக்கும் நேரத்தில் காவல்துறை முஸ்லிம் இளைஞர் மீது தாக்குதல்!

Share this News:

கார்கோன் (15 ஏப் 2022): மத்திய பிரதேசம் கார்கோனில் வெடித்த கலவரத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் குறிப்பாக காவல்துறையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.

காவல்துறையின் மிருகத்தனத்தை பிரதிபலிக்கும் ஏராளமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. கலவரத்தால் பாதிக்கப்பட்ட நகரின் சில பகுதிகள் 144 பிரிவின் கீழ் ஊரடங்கு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

பத்திரிக்கையாளர் அர்பாப் அலி பகிர்ந்துள்ள வீடியோவில், ஞாயிற்றுக்கிழமை நகரில் வெடித்த கலவரத்தின் போது , நோன்பு திறக்கும் வேளையில் பால் வாங்க வெளியே வந்த ஒரு முஸ்லீம் நபர், காவல்துறையினரால் தாக்கப்படுகிறார். அவர் பெட்ரோல் குண்டு வீசியதாக காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர். எனினும் அவர் அதனை மறுத்து விட்டுவிடுமாறு கெஞ்சுகிறார்.

ட்விட்டரில் வெளிவந்த மற்றொரு வீடியோவில், ஓய்வுபெற்ற முஸ்லீம் சப்-இன்ஸ்பெக்டரான 63 வயதான நசீர் அகமது கான், தனது வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது குறித்தும், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்தும், .அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான மூன்று பைக்குகள் எரிக்கப்பட்டது குறித்தும் .ஊடகங்களுக்குச் சொல்ல வந்தபோது, ​​காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளார்.

ஊரடங்குச் சட்டத்தின் போது அத்தியாவசியப் பொருட்கள் வாங்க தொப்பி அணிந்த இளம் முஸ்லிம் சிறுவர்களையும் மத்திய பிரதேச காவல்துறை கொடூரமாகத் தாக்கியுள்ளது.

முன்னதாக, மத்தியப் பிரதேச அரசு, கலவரக்காரர்கள் என்று கூறி முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல வீடுகளை இடித்தது.

நகரில் நிராயுதபாணியாக இருக்கும் முஸ்லிம்களைத் தாக்கி, அடித்துத் துன்புறுத்தும் காவல்துறையினர் தொடர்ந்து அராஜகம் மேற்கொண்டு வருவதும் இது சமூக ஊடகங்களில் வெளியாகிய போதும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


Share this News:

Leave a Reply