ஐதராபாத் (30 ஏப் 2020): இறந்த இந்து பெண்மணியின் உடலை இறுதிச் சடங்கு செய்ய அவரது உறவினர்களே தயங்கிய நிலையில் முஸ்லிம்கள் முன்னின்று இறுதிச் சடங்குகளை செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் பிஜேஆர் நகரை சேர்ந்த 85 வயது இந்து விதவை பெண் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ஆனால் அவர் கொரோனாவால் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சிய அவரது உறவினர்கள் அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய முன்வரவில்லை.
இதனை அறிந்த அருகில் வசிக்கும் முஸ்லிம்கள் ரம்ஜான் நோன்பு நோற்றிருந்தபோதும் அதனை பொருட்படுத்தாமல் உடனே முன்னின்று இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினர்.
இந்தியாவில் இதுபோன்று பல இடங்களில் முஸ்லிம்கள் இந்துக்களின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றியுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு சாரார் விஷமத்தனமான பிரச்சாரங்களை அரங்கேற்றி வரும் வேளையில் இதுபோன்ற மனித நேய செயல்களும் தொடர்ந்தவண்ணமே உள்ளன.