மைசூரு (19 ஜன 2020): மைசூரு மேயர் பதவிக்கான தேர்தலில் முஸ்லிம் பெண் வேட்பாளர் தஸ்னீம் வெற்றி பெற்று மைசூரு மேயர் ஆனார்.
மைசூரின் முதல் பெண் மேயர் என்ற பெருமையும் தஸ்னீமுக்கு கிடைத்துள்ளது. மேயர் பதவிக்கு ஐக்கிய ஜனதா தளம் சார்பில் தஸ்னீம் போட்டியிட்டார். பாஜக சார்பில் கீதாஸ்ரீ யோகானந்த் போட்டியிட்டார். கீதாவை வீழ்த்தி தஸ்னீம் வெற்றி பெற்றுள்ளார்.
இதனையடுத்து 31 வயதான பெண் மேயர் தஸ்லீம் மைசூரின் 33-வது மேயராக பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.