புதுடெல்லி (17 மார்ச் 2022): 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததையடுத்து, காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியான சிறிது நேரத்தில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.
5 மாநிலங்களில் ஏற்பட்ட மோசமான தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் மாநிலத் தலைவர்களை இராஜினாமா செய்யுமாறு சோனியா காந்தி கேட்டுக் கொண்டார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை இராஜினாமா செய்த அடுத்த நாள், நவ்ஜோத் சிங் சித்து ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக மீண்டும் களமிறங்கியுள்ளார்.
பஞ்சாப் முதலமைச்சராக புதன்கிழமை பதவியேற்றுள்ள பகவந்த் மானுக்கு வாழ்த்து தெரிவித்த சித்து, இது பஞ்சாபில் புதிய மாஃபியா எதிர்ப்பு சகாப்தம் என்றார். ஆம் ஆத்மி கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவது நல்ல முடிவு என்றும் அவர் கூறினார்.
சித்துவின் கருத்து காங்கிரசில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.