ஐதராபாத் (18 ஆக 2020): கொரோனா வந்தது மனித வாழ்வில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது.
மனிதன் குளிக்கிறானோ இல்லையோ, சானிட்டைஸர் உபயோகம் அத்தியாவசியமாகிவிட்டது. எங்கு போனாலும், கை கழுவு, சானிட்டைஸர் உபயோகம் செய் என்பதாகவே அறிவிப்புகள் இருந்தபடி உள்ளன.
இந்நிலையில் காய்கறி, மற்றும் பழங்களை சாதாரண தண்ணீரில்தான் கழுவிக் கொண்டு இருந்தோம், ஆனால அதிலும் பாக்டீரியாக்கள், வைரஸ் போன்றவை 100 சதவீதம் வெளியாவதில்லையாம். அதனால் இப்போது இவற்றை சுத்தம் செய்யும், திரவமும் மார்கெட்டில் அறிமுகமாகிவிட்டது.
இவற்றிற்கான விளம்பரங்கள் இணையத்தை ஆக்கிரமித்துக் கொண்டு உள்ளன.