திருமணமாகி 10 நாட்களில் சோகம் – புது மண தம்பதிகள் சாலை விபத்தில் மரணம்!

Share this News:

கோழிக்கோடு (14 நவ 2020): திருமணமாகி பத்தே நாட்கள் ஆன புதுமணத் தம்பதிகள் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த சலாவுதீன் (25), அவரது மனைவி பாத்திமா ஜுமனா (19) ஆகிய இருவரும் புல்லட்டில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கக்கஞ்சேரி ஸ்பின்னிங் மில் அருகே சென்று கொண்டிருந்தபோது, புல்லட்டின் மீது டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே சலாவுதீன் இறந்தார். பாத்திமா ஜுமனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவர்களது உடல் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

உயிரிழந்த புது மாப்பிள்ளை சலாவுத்தீன் கண்ணமங்கலம் மட்டிலைச் சேர்ந்தவராகும். உயிரிழந்த புதுமணப் பெண் பாத்திமா ஜுமானா அப்துல் நாசர் மற்றும் அவரது மனைவி ஷாஹர்பானு ஆகியோரின் மகளாகும். சகோதரர்கள் சல்மானுல் ஃபரிஸ் மற்றும் முகமது ஆதில் ஆகியோராகும்.

திருமணமாகி 10 நாட்களில் புதுமணத்தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *