சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின் என்பவர் ஜோர்டானிலிருந்து ஜிசான் செல்லும் வழியில் ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். சடலம் அல் லெய்த் அரசு மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரணம் பற்றி அறிந்ததும் அவரது கணவர் ஜிசானிலிருந்து சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். விபத்தில் மூன்று குழந்தைகள், மூன்று…

மேலும்...

ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் நூலிழையில் உயிர் தப்பினார்!

சென்னை (06 மார்ச் 2023): ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பிரபல இசையமைப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் பாடகர் ஏ.ஆர்.அமீன். தந்தையின் இசையிலும் யுவன் இசையிலும் தொடர்ந்து பாடல்களைப் பாடி வரும் அமீன், தனி இசைப்பாடகராகவும் வலம் வருகிறார். இந்நிலையில் முன்னதாக தனது பாடல் ஒன்றுக்கான ஷூட்டிங் தளத்தில் படப்பிடிப்புக்காக…

மேலும்...

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் மற்றும் குடும்பத்தினர் கார் விபத்தில் காயம்!

மைசூர் (27 டிச 2022): பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் கார் விபத்தில் சிக்கினர். அவர்கள் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சென்ற வாகனம் மைசூரில் இன்று மதியம் விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கடகோலா நகரில் இந்த விபத்து நடந்துள்ளது. பங்கூரிலிருந்து பந்திப்பூர் நோக்கி பயணித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து நடந்தபோது பிரஹலாத் மோடி, அவரது மகன் மற்றும் அவரது மனைவி மட்டுமே…

மேலும்...

கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் மோதி மூன்று குழந்தைகள் படுகாயம் – பரபரப்பு வீடியோ காட்சி!

புதுடெல்லி (18 டிச 2022); டெல்லியில் கட்டுப்பாட்டை இழந்த கார் குழந்தைகள் மீது மோதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி குலாபி பாக்கில் உள்ள லீலாவதி பள்ளி அருகே இன்று காலை நடைபாதையில் நின்று கொண்டிருந்த குழந்தைகள் மீது மாருதி ப்ராஸ்ஸா என்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியதில் மூன்று குழந்தைகள் படுகாயமடைந்தனர். குழந்தைகளுக்கு பத்து, நான்கு மற்றும் ஆறு வயது ஆகும். இவர்களில் ஒரு குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளார். சம்பவத்தையடுத்து, காரில் இருந்தவர்கள் தப்பியோட…

மேலும்...

உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

கட்வா (06 அக் 2022): உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கட்வாலில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. திருமண நிகழ்வுக்கு குடும்பத்தினர் சென்ற பேருந்து நேற்று இரவு விபத்துக்குள்ளானது. இதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, திரௌபதி தண்டா பனிச்சரிவில் சிக்கிய 41 பேர் கொண்ட குழுவில் 15 பேர் மீட்கப்பட்டனர். 16 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. விபத்தில் உயிரிழந்தவர்களின்…

மேலும்...

ஜித்தாவில் வாகனம் மோதியதில் 4 வயது இந்திய சிறுமி உயிரிழப்பு!

ஜித்தா (15 செப் 2022): சவுதி அரேபியா ஜித்தாவில் வாகனம் மோதிய விபத்தில் 4 வயது இந்திய சிறுமி உயிரிழந்தார். கேரள மாநிலம் பாலக்காடு தெக்குமுறியைச் சேர்ந்த புலிகள் முஹம்மது அனஸின் மகள் ஈஸா மர்யம். இவர் தாயுடன் சாலையை கடக்கும்போது வாகனம் மோதியதில் ஈஸா மர்யம் பரிதாபமாக உயிரிழந்தார். தாய்க்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் நல்லடக்கம் நேற்று மாலை ருவைஸ் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஈஸா மர்யமும், அவரது தாயும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு…

மேலும்...

தஞ்சை அருகே கோவில் திருவிழாவில் தேர் மீது மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி!

தஞ்சை (27 ஏப் 2022): தஞ்சாவூர் அருகே கோவில் தேர் திருவிழாவில் தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான 94 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு, திருவிழா தேரோட்டம் நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது. தேர் கோவில் அருகே வந்தபோது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியது….

மேலும்...

விபத்துக்கான 48 மணி நேர இலவச சிகிச்சை – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

சென்னை 919 டிச 2021): தமிழகத்தின் எந்த பகுதியில் சாலை விபத்து நடந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் என 609 மருத்துவமனைகளில் 48 மணி நேரத்துக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டமான ‘இன்னுயிர் காப்போம் திட்டத்தை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில், சாலை விபத்தில் படுகாயம் அடைபவர்களுக்கு அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனையில் 48 மணி நேரம் இலவச சிகிச்சை அளிக்கும் வகையில், “இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48’’ என்ற…

மேலும்...

நெல்லை – பள்ளி கழிவறைச்சுவர் இடிந்து விபத்து :3 மாணவர்கள் பலி!

நெல்லை (17 டிச2021): நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டிலுள்ள பள்ளியொன்றில் கழிவறைச் சுவர் கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாமாக உயிரிழந்துள்ளனர். நெல்லை பொருட்காட்சி திடல் அருகேயுள்ள சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் சம்பவ இடத்திலேயே இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின்றி 3 மாணவர்கள் உயர் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கே மேலும் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார். உடன் படித்த மாணவர்களின் இந்த உயிரிழப்பை தொடர்ந்து, அங்கு…

மேலும்...

சவூதியில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து இந்தியர்கள் மரணம்!

ரியாத் (04 டிச 2021): சவூதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த முஹம்மது ஜாபிர் என்பவர் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஜுபைல் நகரிலிருந்து ரியாத்திற்கு வந்து கொண்டிருந்தபோது ரியத்திலிருந்து 198 கி.மீ தூரத்தில் உள்ள அல்ரைன் என்ற பகுதியில் விபத்து நடந்துள்ளது. . ஜாபிர் குடும்பத்தினருடன் பயணித்த வாகனம் அல் ரெய்ன் என்ற இடத்தில் மற்றொரு…

மேலும்...