செவிலியர் கூட்டு வன்புணர்வு – 17 வயது இளைஞர் கைது!

Share this News:

போபால் (23 அக் 2022): சத்தீஸ்கரில் உள்ள சுகாதார மையத்தில் செவிலியர் நான்கு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 17 வயது இளைஞர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் தலைமறைவாக உள்ளார்

இச்சம்பவத்தை கண்டித்து மாபெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தொலைதூர பகுதிகளில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பு குறித்து சுகாதார ஊழியர்கள் கவலையடைந்துள்ளனர். பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சத்தீஸ்கர் அரசை கேட்டுக் கொண்டனர்.

மேலும் “எங்களுக்கு பாதுகாப்பு தேவை. “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நாங்கள் செயல்பட மாட்டோம்” என்று மாவட்டத்தில் உள்ள ஒரு சுகாதார மையத்தின் தலைமை சுகாதார அதிகாரி பிரதிமா சிங் கூறியதாக தேசிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.


Share this News:

Leave a Reply