இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 606 ஆக உயர்வு!

Share this News:

புதுடெல்லி (24 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்துள்ளது.

எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply