இந்திய தூதரக உயர் அதிகாரிகளை பாகிஸ்தான் போலீஸ் விடுதலை செய்தது!

Share this News:

இஸ்லாமாபாத் (15 ஜூன் 2020): பாகிஸ்தானில் கைதான இரு தூதரக உயர் அதிகாரிகளை பாகிஸ்தான் போலீஸ் விடுதலை செய்துள்ளது.

இன்று (திங்கள் கிழமை) காலை தூதரகம் வந்து சேரவேண்டிய இரு அதிகாரிகள் தூதரகம் வந்து சேரவில்லை என்றும். அவர்களை இன்று காலை முதல் காணவில்லை என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அவ்விருவரும் சாலை விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

இதனை அடுத்து தற்போது அவ்விருவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் போலீஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக அவ்விருவரையும் விடுதலை செய்ய வேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News: