ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற பிளஸ் டூ மாணவி ஆலியா ஃபாத்திமா!

Share this News:

திருவனந்தபுரம் (28 நவ 2020): படகுக் கலையில் பிரபஞ்சத்தின் ரகசியங்களை ஆராய்ச்சி செய்து, அதனை பாட்டில்களில் ஓவியங்களாக வடிவமைத்தற்காக பிளஸ் டூ படிக்கும் மாணவி ஆலியா ஃபாத்திமா, ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய சாதனைப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளார்.

ஆலியா ஃபாத்திமா, வானியற்பியல், விண்வெளி விண்கலம், சூரிய கிரகணம், சந்திர கிரகணம், கருந்துளை ஆகியவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை பாட்டில் ஓவியமாகியதற்காக இந்த விருதை வென்றுள்ளார். விருதுடன், கிராண்ட்மாஸ்டர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட பாட்டில்களில் ஆலியா ஓவியங்களை வடிவமைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

முன்னதாக அவரது நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில், ஆலியா ஃபாத்திமா அவரது இன்ஸ்டாகிராமில் தனது படைப்புகளை வெளியிட்டார். அவரது பக்கத்தைப் பின்தொடர்பவர்கள் இடும் கருத்துக்களும் தந்த ஊக்கமும் அவருக்கு ஆர்வத்தை
ஏற்படுத்தின.

அதனைத் தொடர்ந்து அவர் தனது சாதனைகளை மேற்கண்ட இணைய தளங்களில் பதிவு செய்தார். இதன் மூலம், தான் கண்ட கனவு நனவாகியதாகவும் சாதனைகளை மேற்கொண்டு தொடர இருப்பதாகவும் ஆலியா ஃபாத்திமா கூறியுள்ளார்.

புத்தூர் அரசு பள்ளியில் படிக்கும் ஆலியா ஃபாத்திமா, பிளஸ் டூ மாணவி ஆவார். இவரது சாதனைகளை வாழ்த்துவோமே?


Share this News:

Leave a Reply