பிரதமர் மோடி ரம்ஜான் நோன்பு வாழ்த்து!

Share this News:

புதுடெல்லி (24 ஏப் 2020): பிரதமர் மோடி ரம்ஜான் நோன்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் புனித ரம்ஜான் நோன்பு நாளை முதல் தொடங்குகிறது. ஊரடங்கு கடைபிடிக்கப்படும் சூழலில் இந்த நோன்பு தொடங்குகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி ரம்ஜான் நோன்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

ரம்ஜான் முபாரக்! அனைவரின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன். இந்த புனித மாதம், ஏராளமான கருணை, நல்லிணக்கம் மற்றும் இரக்கத்தையும் கொண்டு வரட்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் வென்று ஆரோக்கியமான புது உலகை உருவாக்குவோம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply