புதுடெல்லி (08 ஏப் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே சோகத்தில் இருக்க, ‘பிரதமர் மோடியை கவுரவிக்க அனைவரும் 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள்’ என்று இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ” எனக்காக அனைவரும் 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள் என சமூக வலைதளங்களில் சிலர் பிரசாரம் செய்து வருவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. முதலில் பார்க்கும்போது என்னைத் தகராறில் சிக்க வைக்க பெயரை பயன்படுத்தி சதி நடப்பதாகத் தோன்றுகிறது.
ஒருவேளையாரவது என்மீது உள்ள அபிமானத்தில் கூட செய்திருக்கலாம். ஆனால் நான் வலியுறுத்துவது என்னவென்றால், உண்மையிலேயே என்மீது அன்பும், எனக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருந்தால், ஒரு ஏழைக் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள். கரோனா வைரஸ் இருக்கும்வரை இதுபோல தேவை இருக்கும். இதைவிட எனக்கு பெரிய மரியாதை எதுவும் இல்லை.” என்று பதிவிட்டுள்ளார்.