கொரோனாவை எதிர்கொள்ள சீனாவுக்கு உதவ தயார்: பிரதமர் மோடி!

Share this News:

புதுடெல்லி (09 பிப் 2020): கொரோனா வைரஸ் நோயை எதிர்கொள்வதற்கு சீனாவிற்கு உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி சீன அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

, கொரோனா வைரஸ் சவாலை எதிர்கொள்ள சீனாவிற்கு உதவ இந்தியா தயாராக உள்ளது. இந்த வைரசால் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.

ஹூபெய் மாகாணத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்கு சீன அரசு செய்த உதவிக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply