புதுடெல்லி (13 பிப் 2020): பிரதமர் மோடியின் ஒரு நாள் செலவு ₹ 1.62 கோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய பட்ஜெட்டில் எஸ்.பி.ஜி.க்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.592.55 கோடி அடிப்படையில் பார்த்தால், பிரதமரின் பாதுகாப்புக்கு ஒரு நாளைக்கு ரூ.1.62 கோடி செலவிடப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு ரூ.6.75 லட்சமும், ஒரு நிமிடத்திற்கு ரூ.11, 263 செலவிடப்படுகிறது.
இதுதொடா்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூா்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷண் ரெட்டி, பிரதமருக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும், சிஆா்பிஎஃப் படையினரின் பாதுகாப்பில் 56 முக்கிய பிரமுகா்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டவா்கள் யார் என்ற கேள்விக்கு, பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பதிலளிக்க இயலாது என்று விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் சோனியா உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டு, இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் மோடி மட்டுமே எஸ்.பி.ஜி பிரிவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.