புதுடெல்லி (03 பிப் 2023): அதானி பங்குச்சந்தை மோசடி சர்ச்சையை எதிர்த்து இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.
அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு மூலம் விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.காங்கிரஸ் எம்.பி.க்கள் ஹைபி ஈடன், டி.என்.பிரதாபன், பென்னி பஹானன் ஆகியோர் லோக்சபாவில் அவசர தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர்.
அதானி பங்கு சர்ச்சை குறித்து விவாதம் நடத்தக் கோரி ராஜ்யசபாவில் ஏ.ஏ.ரஹீம் எம்.பி நோட்டீஸ் அளித்திருந்தார். ஆனால் அவசர மனு நிராகரிக்கப்பட்டது. இதனால், எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். சபாநாயகர்கள் அமைதியாக இருக்குமாறு பரிந்துரைத்த போதிலும், எதிர்க்கட்சிகள் விடவில்லை.
இவ்விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் மேற்பார்வையில், பங்குச்சந்தை சர்ச்சையை விசாரிக்க வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன.
இதற்கிடையே மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதனை அடுத்து திங்கள்கிழமை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.