புதுடெல்லி (15 ஏப் 2020): கொரோனா பரவலால் வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “வளைகுடா நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் தொழில்கள் முடக்கத்தால் ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
நாடு திரும்ப விரும்பும் அவர்கள், விமானங்கள் ரத்தால் வர முடியவில்லை. ஆகவே, மத்திய அரசு அவர்களுக்கு விமானங்கள் ஏற்பாடு செய்துதர வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.