இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்தாதீர் – பிரதமருக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!

Share this News:

புதுடெல்லி (20 ஜூன் 2020): சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ள நிலையில், “20 இந்திய வீரர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள்?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா-சீனா இடையே கிழக்‍கு லடாக்‍கின் கல்வான் பகுதியில் நடைபெற்ற மோதல் தொடர்பாக, மத்திய பா.ஜ.க. அரசு மீது திரு. ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினர் மீது சீனா திட்டமிட்டே தாக்‍குதல் நடத்தியதாகவும், அப்போது மத்திய அரசு தூங்கி கொண்டிருந்ததாகவும், அதற்கான விலையாக நமது வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் கூருவதுபோல் இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை என்றால் கொல்லப்பட்ட 20 வீரர்கள் எங்கே வைத்து கொல்லப்பட்டார்கள்? ஏன் கொல்லப்பட்டார்கள்? என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

 


Share this News: