ஜெய்ப்பூர் (16 டிச 2022): பாஜகவை ஆட்சியில் இருந்து காங்கிரஸ் வீழ்த்தும் என்று ராகுல் காந்தி கூறினார்.
பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக ராஜஸ்தானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் சர்வாதிகாரிகளின் கட்சி அல்ல. வட மாநிலங்களில் பாரத் ஜோடோ யாத்ரா வெற்றியடையாது என்று சிலர் கூறியதாகவும் ஆனால் மக்கள் ஆதரவுடன் பாரத் ஜோடோ யாத்திரை வெற்றி பெற்றுள்ளதாகவும் ராகுல் காந்தி கூறினார்.
மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் இப்போது ராஜஸ்தானில், யாத்திரைக்கு ஏராளமான மக்கள் வரவேற்பு அளித்தனர்.
கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்ரா மக்கள் ஆதரவில் வெற்றிகரமாக நடந்தது. கட்சி ஆட்சியில் இல்லாத மத்திய பிரதேசத்தில் யாத்திரைக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
. காங்கிரஸை செயலிழக்கச் செய்ய ஊடகங்கள் பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
மற்றவர்களை இழிவுபடுத்துவதே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் நோக்கம். ஊடகங்கள்தான் அவர்களுக்கு அதிக உதவி செய்கின்றன என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.