கோமாளி விளையாட்டு விளையாட வேண்டாம் – மோடியை சாடிய ராகுல் காந்தி!

Share this News:

பதுடெல்லி (04 மார்ச் 2020): கோமாளி போல் விளையாடி இந்தியர்களின் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று ராகுல் காந்தி மோடிக்கு ட்வீட் செய்துள்ளார்.

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதை பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிற்கு டேக் செய்து அவர் பதிவிட்டுள்ளதாவது:
“உங்களது சமூக ஊடகக் கணக்குகளை வைத்துக் கொண்டு கோமாளி போல் விளையாடி இந்தியாவின் நேரத்தை வீணாக்க வேண்டாம். இந்தியா நெருக்கடியான ஒரு சூழலை எதிர்கொண்டிருக்கும் இந்நேரத்தில், கொரோனா பாதிப்பில் இருந்து ஒவ்வொரு இந்தியனையும் பாதுகாப்பதற்குரிய திட்டங்களில்தான் பிரதமரின் முழு கவனம் இருக்க வேண்டும். அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை இதில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்” என்று எழுதியுள்ளார்.


Share this News:

Leave a Reply