புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

Share this News:

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இதுகுறித்த ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதியைக் கொண்டு திறக்கவும் இல்லை. விழாவுக்கு அவரை அழைக்கவும் இல்லை. இது நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு அவமதிப்பு ஆகும். நாடாளுமன்றம் அகந்தையால் (‘ஈகோ’) கட்டப்பட்டது அல்ல. அது, அரசியல் சாசனத்தின் மதிப்பினால் கட்டப்பட்டது ஆகும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Share this News: