புதுடெல்லி (19 மே 2020): வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ரெயில்கள் இயங்கும் என்று மத்திய ரெயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க நான்காம் முறையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வரும் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
இந்நிலையில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், வருகிற ஜூன் 1-ம் தேதி முதல் குளிரூட்டப்பட்ட ஏசி பெட்டி இல்லாத 200 ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், இயக்கப்படும் ரயில்களுக்கான முன்பதிவு ஆன்லைனில் மட்டுமே செய்யப்படும். இந்த ரயில்கள் வழக்கமான கால அட்டவணைப்படியே இயக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.