மாஸ்கோ (05 செப் 2020): மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவிலிருந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை அமச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா தரப்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார். இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய விவகாரங்கள் குறித்த ஆலோசனை நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின் சீன பாதுகாப்புத்துறை அமைச்சரை ராஜ்நாத்சிங் சந்தித்தார். லடாக் எல்லையில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், இரு நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்களை சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவிலிருந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு ஈரான் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் அமீர் ஹடமீயை ராஜ்நாத்சிங் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.