மும்பை (28 நவ 2020): பாலிவுட் நடிகையும், ‘பிக் பாஸ்’ மூலம் புகழ் பெற்றவருமான சனாகான் குஜராத்தை சேர்ந்த முப் ஃதி சயீத் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் திரையுலகிலிருந்து இருந்து விலகிய பின்னர், முழுமையாக தன்னை இஸ்லாமிய வழிபாடுகளில் ஈடுபடுத்திக் கொண்டார். புன்பு சனா கான் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு தனது பெயரை சயீத் சனா கான் என்று மாற்றிக் கொண்ட சனா கான், இஸ்டா கிராமில் திருமணம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் “நான் திருமணம் செய்யும் வரை ஹலால் காதல் மிகவும் அழகாக இருக்கும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை” என்றும் பதிவிட்டுள்ளார்.
சனாகானுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.