இந்தியாவுக்கு மீண்டும் ஆக்ஸிஜன் கொள்கலன்களை வழங்கிய சவூதி அரேபியா!

Share this News:

புதுடெல்லி (30 மே 2021): இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க சவூதி அரேபியா இந்தியாவுக்கு தற்போது மீண்டும் உதவிகளை வாரி வழங்கியுள்ளது.

கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக இந்தியா, ஈடு செய்ய முடியாத அளவுக்கு மனித உயிர்களையும், பொருளாதார வீழ்ச்சியினையும் சந்தித்து வருகின்றது.

இந்தியாவுக்கு உலக நாடுகள் பலவும் கொரோனா நிவாரண பொருட்களையும் உதவிகளையும் வாரி வழங்கி வருகின்றன.

இந்நிலையில் ஏற்கனவே இந்தியாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் என பலவற்றையும் அனுப்பிய சவுதி அரேபியா தற்போது மீண்டும் உதவிகளை வாரி வழங்கியுள்ளது. கடந்த மாதமே சவுதி இந்தியாவுக்கு 80 டன் லிக்விட் ஆக்சிஜனை வழங்கியது. இந்த நிலையில் தற்போது 60 டன் ஆக்சிஜன் அடங்கிய மூன்று கொள்கலனை அனுப்பியுள்ளது.

இவற்றோரு 100 கன்டெய்னர்களையும் அனுப்பியுள்ளது. இந்த கொரோனா நிவாரண பொருட்கள் ஜூன் 6, 2021 அன்று மும்பைக்கு வந்து சேரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இந்தியாவின் எண்ணெய் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சவுதியின் இளவரசருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *