ஐதராபாத் (04 ஜன 2020): “குடியுரிமை சட்டம் தொடர்பான ஆவணங்கள் கேட்கும் பட்சத்தில் அதனை சமர்ப்பிக்க வேண்டியதில்லை!” என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மஹ்மூது பிராச்சா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மஹ்மூத், “குடியுரிமை சட்டம் தொடர்பாகவோ (CAA,) NRC, NPR தொடர்பாகவோ அதிகாரிகள் ஆவணங்கள் கேட்டால் கொடுக்காமல் மறுப்பதில் தவறு ஏதும் இல்லை. அதேவேளை தவறான தகவல் கொடுப்பது மட்டுமே தவறாகும், எனவே நம்மிடம் சரியான தகவல் இல்லை எனக் கூறி மறுத்துவிடலாம்” என்று தெரிவித்துள்ளர்.
மேலும் சர்வதேச ஊடகங்களுக்கு அவர் வேண்டுகோளையும் விடுத்துள்ளார். இந்திய குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களை சரியான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டி அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியர்களின் குடியுரிமைக்காக தனது வயதையும் பொருட்படுத்தாமல் கடுங் குளிரில் போராட்டக்காரர்களுடன் அமர்ந்து போராடும் ஷஹீன் பாஹ் குறித்து உலகுக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் போராட்டம் காரணமாக கைதாகி சிறையில் உள்ள பிம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்டவர்கள் விரைவில் விடுதலை ஆக பிரார்த்தனை செய்யவும் அவர் கேட்டுக் கொண்டார்.