உதய்பூர் படுகொலைக்கு நிபுர் சர்மாவே காரணம் – உச்ச நீதிமன்றம்.!

Share this News:

புதுடெல்லி (01 ஜூலை 2022): நாட்டில் தற்போது நிலவும் பதற்றத்திற்கும் உதய்புர் படுகொலைக்கும் காரணம் நிபுர் சர்மாவே என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

முகமது நபி குறித்த கருத்தால் பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி நுபுர் சர்மா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது உச்ச நிதீமன்ற நீதிபதிகள் நுபுர் சர்மவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது:-

நுபுர் சர்மா தனது பொறுப்பற்ற பேச்சால் நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார். நுபுர் சர்மாவுக்கு எதிராக பதிவான புகார்களின் மீது டெல்லி போலீஸ் என்ன செய்கிறது. அவர் நடந்து கொண்ட விதம் , அதன் பிறகு அவரது வழக்கறிஞர்கள் சொல்வது எல்லாம் வெட்ககேடானது. உதய்பூரில் டெய்லர் கொல்லப்பட்டது நுபுர் சர்மாவின் பேச்சால்தான்.டி.வி.யில் தோன்றி நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பதால் எதைவேண்டுமானாலும் பேசி விடமுடியாது.நாட்டில் தற்போது நடப்பதற்கு இந்த பெண்மணியே பொறுப்பு என கூறினார்கள்.

நுபுர் சர்மா தம்முடைய கருத்துகளை வாபஸ் பெற்றது என்பது காலம்தாழ்த்திய செயல்.நுபுர் சர்மா தமது உயிருக்கு ஆபத்து என்கிறார். அவரால்தான் இந்த ஒட்டுமொத்த நாட்டுக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. நுபுர் சர்மா போன்றவர்கள் ஒருவித செயல்திட்டத்துக்காகவே பேசுகின்றனர். இப்படி பேசுவதன் மூலம் விளம்பரம் தேடுகின்றனர்.

நுபுர் சர்மா மீது இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவே? நுபுர் சர்மாவை ஏன் டெல்லி போலீசார் கைது செய்யவில்லை? விசாரணைக்குப் போன நுபுர் சர்மாவுக்கு சிவப்பு கம்பள மரியாதை கிடைத்ததா? அதிகாரம் தங்களிடம் இருக்கிறது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பது எப்படி சரியாகும்?

இதுஜனநாயக நாடுதான்.. இங்கே பேச்சுரிமையும் இருக்கு.. புல் வளர்வதற்கும் உரிமை இருக்கு.. அதே புல்லை கழுதை மேய்வதற்கும் கூட உரிமை இருக்கிறது. தாம் பேசியதால் ஏற்படும் எதிர்விளைவுகளை கொஞ்சமும் யோசிக்காமல் பேசியிருக்கிறார் நுபுர் சர்மா. ஆகையால் அனைத்து வழக்குகளையும் டெல்லி மாற்ற கோரும் நுபுர் சர்மா மனு நிராகரிக்கப்படுகிறது. மேலும் எந்தவொரு பரிகாரத்தையும் தேட ஐகோர்ட்டை அணுக வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *