ஸ்ரீநகர் (23 ஜூலை 2020):காஷ்மீரைச் சேர்ந்த சந்தீப் கோர்! தனது சகோதரர்மொஹிந்தர்பால் சிங்கிடமிருந்து ஒரு தொடர்பும் இல்லை. அவரிடமிருந்து ஒரு வார்த்தையும் கேட்க முடியவில்லை. அவரைச் சந்திக்க முடியாததால் அவளது கவலை ஒவ்வொரு நாளும் வளர்கிறது.
அவரது சகோதரர், மொஹிந்தர்பால் சிங், 29 வயதான காஷ்மீர் சீக்கிய இளைஞர்! புது தில்லியின் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜூன் 15 அன்று போராளி அமைப்பான காலிஸ்தான் விடுதலை முன்னணியுடன் (கே.எல்.எஃப்) தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த திவான் பேக் கிராமத்தைச் சேர்ந்த சிங், மேலும் இருவருடன் கைது செய்யப்பட்டார். அவர்கள் வட மாநிலங்களில் இலக்கு வைக்கப்பட்ட பல்வேறு கொலைகளைச் செய்ய திட்டமிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டவர்கள்!
குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவ பஞ்சாபைச் சேர்ந்த குர்தேஜ் சிங் (41), ஹரியானாவைச் சேர்ந்த லவ்பிரீத் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.எவ்வாறாயினும், காஷ்மீர் சீக்கிய இளைஞர்களின் குடும்ப உறுப்பினர்கள் தில்லி காவல்துறையின் கூற்றை மறுத்து, அவர்கள் ஒரு ‘ஜோடிக்கப்பட்ட வழக்கில்’ சிக்க வைக்கப்பட்டவர்கள் என்று குற்றஞ் சாட்டியுள்ளனர்.
தில்லியில் ஷாஹீன் பாக் நகரில் சி.ஏ.ஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தம் தரப்பிலிருந்து லங்கர் சேவை செய்ததற்காக மட்டுமே அவரகள் குறி வைக்கப்பட்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.
‘இந்த நபர்கள் லங்கருக்கு சேவை செய்து கொண்டிருந்தனர், அவர்களை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி, அவர்களுக்கு எதிராக கடுமையான வழக்குப் பிரிவுகளை சுமத்தி சிறைக்கு அனுப்பிவிட்டது’ என்று மன வருத்தத்துடன் பொங்கி வரும் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டே கூறுகிறார் சந்தீப் கோர்! ஐனநாயக நாட்டின் உரிமைக் குரல்கள் எப்போதும் அமுக்கி வைக்கப்படக் கூடியது அல்ல என்பதே உண்மை தேசியவாதிகளின் கூற்றாக இருக்கிறது.