புதுடெல்லி (18 மே 2020): கொரோனா வைரஸுக்கு பின்னான காலத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த, 20 லட்சம் கோடியில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
அதனை தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறப்பு பொருளாதார திட்டங்களை வெளியிட்டார்.
தற்போது, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அதிர்ச்சி தரும் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ப.சிதம்பர்ம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
” பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடிகளுக்கான திட்டங்கள் ஏதும் இல்லை. நிதி அமைச்சர் அறிவித்ததோ வெறும் 1 லட்சத்தி 86 ஆயிரத்து 650 கோடி தான். இந்த எண்ணை எப்போதும் கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை நிலவரம் தெரிந்துவிடும் என்று கூறியுள்ளார்.
பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ 1,86,650 கோடி தான்
ரூ 1,86,650 கோடி மட்டுமே! இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்
— P. Chidambaram (@PChidambaram_IN) May 18, 2020