திருவனந்தபுரம் (23 மே 2020): ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் ஊரடங்கு தளர்த்தப் படுகிறது.
கொரோனா பரவலைத் தடுக்க கேரளாவில் மற்ற நாட்களில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்க ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் ரம்ஜான் பண்டிகை அறிவிக்கப் பட்டுள்ளதால், அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் வகையில் சனிக்கிழமை இரவு 9 மணி வரை ஊரடங்கு தளர்த்தப் படுகிறது.
அதேபோல ரம்ஜான் பண்டிகை தினமான ஞாயிற்றுக் கிழமை மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்படும். மற்ற ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கம்போல் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.