காவி உடை அணிந்து மிஸ் இந்தியா போட்டியில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிரிதி இரானி – பரபரப்பை கிளப்பும் வீடியோ!

Share this News:

கொல்கத்தா (17 டிச 2022): காவி உடையில் ஸ்மிரிதி இரானி மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்கும் வீடியோவை வெளியிட்டு, ஷாருக்கான் படம் தொடர்பான சர்ச்சையில் பாஜகவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ரிஜு தத்தா, ‘தீபிகா காவி அணிந்தால் பிரச்சனை, ஸ்மிருதி இரானி அணிந்தால் பிரச்சனை இல்லையா?’ என வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி காவி உடை அணிந்து மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றுள்ளார். 1998 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் ஸ்மிருதி இரானி பங்கேற்ற வீடியோவை ரிஜு தத்தா பகிர்ந்துள்ளார்.

பாஜகவின் ஐடி செல் தலைவர் அமித் மாளவியாவின் ட்வீட்டுக்கு பாதிலளிக்கும் விதமாக ரிஜு தத்தா இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

மேலும் காவியை உங்கள் கட்சியின் பூர்வீகச் சொத்தாக மாற்றும் இந்த போலித்தனத்தை முதலில் நிறுத்துங்கள். தீபிகா போன்ற பெண்கள் காவி உடை அணிவதில் உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனை உள்ளது.

ஆனால் ஸ்மிருதி இரானி அணிந்ததில் எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் பார்வையற்றவர் என்று நான் சந்தேகிக்கிறேன். பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ‘சன்ஸ்காரி பிராமணர்கள்’ என்று அழைப்பவர்களின் கட்சிக்காரர்கள் நீங்கள்,” என்று ரிஜு தத்தா ட்வீட் செய்துள்ளார்.


Share this News:

Leave a Reply