இந்தி ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே பேச வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற்றது மத்திய அரசு!

Share this News:

புதுடெல்லி (14 ஜூன் 2019): ரயில்வே அதிகாரிகள் இந்தி மற்ரும் ஆங்கிலத்தில் தான் பேசவேண்டும் என்ற உத்தரவிற்கு எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, சுற்றறிக்கையை திரும்பப்பெறுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது. தென்னக ரயில்வேயின் இந்த உத்தரவிற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தவறுதலாக வந்த அறிவிப்பு எனவும், பழைய நடைமுறையே தொடரும் என்றும் தென்னக ரயில்வே பொதுமேலாளர் அறிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply