புதுடெல்லி (27 ஜன 2023): பிபிசி ஆவணப்படம் திரையிட தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளனர்.
பல்கலைக்கழகங்களில் பிபிசி ஆவணப்படம் திரையிட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
ஜேஎன்யுவில் ஏபிவிபி அமைப்பினர் கல் வீசி தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், பல்கலைக்கழகத்தின் மின்சாரம் மற்றும் இணையதளம் துண்டிக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்தும், மாணவர்கள் பேரணி நடத்தினர். இந்த ஆவணப்படம் டெல்லி பல்கலைக்கழகத்தில் இன்று மாலை திரையிடப்படுகிறது.
நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் பிபிசி ஆவணப்படம் திரையிடப்படுவதை தடுக்க பல்கலைக்கழக அதிகாரிகள் காவல்துறையினரை நியமித்தனர், ஆர்ப்பாட்டத்தை நிறுத்த மின்சாரம் மற்றும் இணையத்தை துண்டித்தனர், ஆனால் தற்போது போராட்டம் தீவிரமடைய தொடங்கியுள்ளது. ஜேஎன்யுவில் நடந்த போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு மாணவர் அமைப்புகள் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு கலைப் பீடம் முன் பிபிசி ஆவணப் படம் திரையிடப்படுகிறது.
பல்கலைக் கழகத்திடம் அனுமதி பெறாததால், காவல்துறையினரால் ஆவணப்பட காட்சியை தடுத்து நிறுத்தும் வாய்ப்பு உள்ளது. மேலும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயலாம் எனவும் கூறப்படுகிறது.