உடுப்பி (01 பிப் 2022): கர்நாடகா மாநில அரசுக் கல்லூரியில் தடையை மீறி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்குச் செல்ல முடிவு செய்திருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மாநில கல்லூரியில் மாணவிகள் வகுப்பு ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பிப்ரவரி 1ம் தேதி (செவ்வாய்கிழமை) உலக ஹிஜாப் தினமாக கொண்டாடப்படுவதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மாணவிகள் கல்லூரிக்கு வருவார்கள், ஆனால் வகுப்புகளில் கலந்துகொள்ள ஹிஜாபைத் தவிர்க்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறவிருக்கும் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டியிருப்பதால், ஹிஜாப் பிரச்சனை 1,000 மாணவர்களின் கல்வி வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. வெளியாட்கள் யாரும் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.