புதுடெல்லி (13 ஜூலை 2020): இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார முன்னேற்றத்திற்காக 75,000 கோடி கூகுள் நிறுவனம் முதலீடு செய்யும் என அதன் செயல் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இந்த முதலீடு ஐந்து முதல் ஏழு வருடங்களில் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
முதலாவதாக ஒவ்வொருவரும் தத்தமது தாய் மொழிகளிலேயே வலைதளங்களை அணுகுவதான வசதி
இரண்டாவதாக, இந்தியாவின் தனித்துவமான தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குதல்
மூன்றாவதாக, வணிகத் துறைகளில் அவற்றின் டிஜிட்டல் மாற்றத்தைத் தொடங்கும்போது அவர்களுக்கு அதிகாரம் அளித்தல்
நான்காவதாக, சுகாதாரம், கல்வி மற்றும் வேளாண்மை போன்ற துறைகளில் தொழில்நுட்பம் மற்றும் சமூக நன்மைக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகிய நான்கு தளங்களில் இந்த முதலீடு இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாரதப் பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பங்கேற்பதில் பெருமை அடைவதாகவும் சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.