அயோத்தி வழக்கு தீர்ப்பு – சன்னி வக்பு வாரியத்தின் முடிவில் திடீர் மாற்றம்!

Share this News:

புதுடெல்லி (10 நவ 2019): அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று சன்னி வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது.

அயோத்தி வழக்கில் இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும் மாற்று இடத்தில் ஐந்து ஏக்கர் நிலம் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது.

இதுகுறித்து சன்னி வக்ஃப் வாரியம் காலையில், 5 ஏக்கர் நிலம் எங்களுக்கு ஏற்புடையது இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பில் முரண்பாடுகள் இருப்பதால் மறுசீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்று கூறியது.

ஆனால் சன்னி வக்ஃப் வாரியம் தனது முடிவை இப்போது மாற்றியுள்ளது. அதன்படி அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அயோத்யா ஜம்மா மஸ்ஜித் ஷாஹி இமாம் அளித்த பேட்டியில், அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். இஸ்லாமிய மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எல்லோரும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம் என்று கூறிய பின்பே இப்படி தீர்ப்பு வந்துள்ளது. இந்த நிலையில் நாம் மீண்டும் அதை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வது சரியல்ல என்று தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply