புதுடெல்லி (16 மார்ச் 2022): பிரபல மலையாள தொலைக்காட்சி சேனலான மீடியா ஒன் மீதான ஒன்றிய அரசின் தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீடியா ஒன் தொலைக்காட்சி கடந்த ஜனவரி மாதம் ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அத்தொலைக்காட்சி நிறுவனம் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால் கேரள நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
இதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம்நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு தடையை நீக்கி இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
சேனல் முன்பு இருந்தது போல் செயல்படலாம் என்று இந்த அமர்வு தெரிவித்துள்ளது. சேனலின் தடை தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் சமர்ப்பித்த கோப்புகளை ஆய்வு செய்த பின்னர் தடை நீக்கப்பட்டது.