புதுடெல்லி (16 மார்ச் 2021): தப்லீ ஜமாத்தை கொரோனா பரப்பியவர்கள் என அவதூறு குறிப்பை எழுதிய மருத்துவ ஆசிரியர்கள் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளனர். மேலும் அந்த குறிப்பு நீக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் பாடப்புத்தகத்தில் தப்லீக் ஜமாத்தினர் குறித்து விஷமதனமான குறிப்பு பதியப்பட்டிருந்தது. இந்த குறிப்புகளை அகற்றிய ஆசிரியர்களும் புத்தக வெளியீட்டாளர்களும், இதுபோன்ற குறிப்புகளை வெளியிட்டதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்டனர்.
விஷமக்கருத்து நீக்கப்பட்டுள்ள நிலையில் புத்தகத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.