தொலைபேசி ஒட்டுக்கேட்பு – தமிழிசை சவுந்திரராஜன் குற்றச்சாட்டு!

Share this News:

ஐதராபாத் (10 நவ 2022): தெலங்கானாவின் ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ் கட்சிக்கும் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனுக்கும் இடையே மோதல்கள் இருந்து வருகிறது.

இந்நிலையில் டி.ஆர்.எஸ் கட்சி தன்னை எதர்க்கெடுத்தாலும் குற்றம்சாட்டுகின்றனர் என தெலங்கானா கவர்னர் தமிழிசை தெரிவித்தார். போச்கேட் விவகாரம் தொடர்பாக டி.ஆர்.எஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கவர்னர் தமிழிசையின் ஏடிசி துஷார் என்பவருக்கு தொடர்பு இருக்கிறது எனவும் அதில் ராஜ்பவனும் சம்பந்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டது.

துஷார் தனக்கு தீபாவளி வாழ்த்து சொல்ல தன்னை அழைத்தார் எனவும் அதன் பின்னர் தான் இது போன்ற செயல்களில் டி.ஆர்.எஸ் கட்சி ஈடுபடுவதாக கூறினார். எனவே தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுகேட்கப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது என கூறினார். மேலும் இது தனது தனியுரிமையில் தலையிடும் விஷயம் எனவும் குற்றம்சாட்டினார்.

தெலங்கானா மாநிலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு மேற்கொள்வது, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன் வடிவுக்கு அனுமதி வழங்காதது என பல்வேறு காரணங்களுக்காக தெலங்கானா அரசு தமிழிசையை குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply