புல்வாமா (12 ஜன 2020): காஷ்மீர் புல்வாமாவில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன..
இந்நிலையில், இன்று புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் உள்நுழைந்ததாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப்படையினர் அவ்விடத்திற்குச் சென்றனர். தொடர்ந்து, பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.