சென்னை (09 ஜூன் 2020): ஒடிசாவின் தெங்கனல் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரண்டு இருக்கைகள் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானதில் பெண் பயிற்சி விமானி மற்றும் அவரது பயிற்றுவிப்பாளர் கொல்லப்பட்டனர்.
பிரசாலாவில் உள்ள அரசு விமானப் பயிற்சி நிறுவனத்தில் (கேடிஐ) பயிற்சியாளர் விமானம் திங்கள்கிழமை காலை புறப்பட்ட பின்னர் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கேப்டன் சஞ்சிப் குமார் ஜா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி அனிஸ் பாத்திமா ஆகியோர் இந்த விபத்தில் உயிர் இழந்தனர் ”என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருவரும் காமக்கியநகரில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
பயிற்றுவிப்பாளர் மற்றும் பயிற்சி விமானியின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், தொழில்நுட்பக் கோளாறு அல்லது சீரற்ற வானிலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த பயிற்சி விமானி அனீஸ் பாத்திமா சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.